Tuesday, December 18, 2012

வலையுலக நண்பர்களுக்கு தொழிற்களம் அழைப்பிதழ்

இணையத்தால் இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!

தொழிற்களம் டிசம்பர் விழா குறித்து முதல் அறிவிப்பை நேற்று வெளியிட்டதுமே அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் நம்மை தொடர்பு  கொண்ட சக நண்பர்கள், என்ன இவ்வளவு குறுகிய நாளில் தெரிவிக்கின்றீர்கள்? முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை? என்று உரிமையுடன் கேட்டனர்.

இவ்விழாவை ஒரு பொது விழாவாக நடத்தினாலும், நம் இணைய நண்பர்களை பற்றி வெளி உலகிற்கு கொண்டு செல்ல சரியான சந்தர்ப்பமாக இவ்விழாவை பயன்படுத்த நம் நண்பர்கள் உருதுணையாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் உரிமையுடன் நம்மை தொடர்பு கொண்ட மதுமதி அவர்கள், "ஒட்டுமொத்த பதிவுலகையும் அழைத்து இந்த விழாவை திருப்பூரில் பிரம்மாதப்படுத்தி விடலாம்" என்றார். அத்துடன் இவ்விழாவில் இணையத்தின் நன்மை குறித்து கருத்தரங்கத்தில் பேசவும் சம்மதம் தெரிவித்தார். 

மற்றும் அன்பின் சீனா அய்யா முதல் ஆளாய் தனது வழக்கமான பானியில் ஆதரவை தெரிவித்து நமக்கு உற்சகத்தை வழங்கி இருக்கிறார்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று "பிரபல பதிவர்" சீனு, மற்றும் செழியன், பதஞ்சலி ராஜா, செல்லதுரை போன்ற இளைஞர் பட்டாளம் துணை நின்று வரவேற்பு குழுவாக செயல்பட ஆயத்தமாகி விட்டனர்.

இன்னுமொரு செய்தி என்னவென்றால்,

நம்ம திண்டுக்கல் தனபாலன் அலைபேசியில், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் விடாமல் இவ்விழா குறித்தும், சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் பேசிவிட்டு, "நாம இல்லாம விழாவா?" என்று குதுகளிக்க வைத்தார். மேலும் நண்பர்கள் அனைவரையும் திரட்டுவோம் என்று  மிகுந்த உத்வேகத்தை கொடுத்தார்.

இங்கணமே நம் குழு நண்பர்கள் அனைவருமே இவ்விழாவை சிறப்பிக்க பெரும் துணைசெய்து வருகின்றனர். 

அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று சொல்லி பிரித்திட முடியாது அல்லவா?

இதோ!  இணைய நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இந்த பூச்செண்டு தொழிற்களத்தின் சார்பாக


தொழிற்களம் தங்களை வருக!! வருக!! என வரவேற்கிறது.

தொழிற்களத்தின் "உறவோடு உறவாடுவோம்" டிசம்பர் விழாவில் சந்திப்போம் தோழர்களே!!


1 comment:

  1. நல்லதொரு ஏற்பாடு நண்பரே...
    தங்களின் இந்த முயற்சி இமாலய வெற்றி காணும்...
    நட்புக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜமாய்த்து விடலாம். மதுமதி போன்ற ஆற்றல்மிகு செயல்வீரர்கள் இருக்கும்போது கேட்கவும் வேண்டுமா.

    சென்னை பதிவர் சந்திப்பே இன்னும் உலகம் முழுவதும் பேசப்பட்டு பாராட்டும் பெற்று வருகிறது... அதுபோல திருப்பூரையும் கலக்கி விடலாம். தொடரட்டும் சீரிய பணி.

    ReplyDelete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...